Wednesday 8th of May 2024 04:11:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
அரிசோனாவிலும் பைடன் வெற்றி;   290 இடங்களைக்  கைப்பற்றினார்!

அரிசோனாவிலும் பைடன் வெற்றி; 290 இடங்களைக் கைப்பற்றினார்!


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 11 தோ்தல் சபை வாக்குகள் பைடனுக்குக் கிடைத்துள்ளன.

இந்த வெற்றி மூலம் 1996-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரிசோனாவை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே வெற்றிக்குத் தேவையான 270 –க்கும் அதிகமான தோ்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகளை பைடன் பெற்ற நிலையில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அரிசோனாவிலும் வென்றதன் மூலம் அவர் 290 உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, 214 இடங்களை வென்றிருந்த ரட்ம்ப் 3 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களைக் கொண்ட அலாஸ்கா மாகாணத்தை வென்றதன் மூலம் 217 இடங்களைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் 50 மாகாணங்களில் 48 மாகாணங்களில் தோ்தல் முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ளன. முடிவுகள் வெளியாகாத இரு மாகாணங்களிலும் பைடனே தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

எனினும் தனது தோ்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE